Wednesday, August 1, 2012

எனது தளத்தில் உங்கள் தளம் ..

கருத்தாளர் -ஜூலை

நமது தளத்தின் பதிவுகளுக்கு சிறப்பான கருத்துகள் கிடைத்தால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு

நிறைகளை மட்டும் அல்லாது குறைகளையும் சுட்டி காட்டி  அதிக பதிவுகளுக்கு வருகை தந்து கருத்தளித்த பதிவர் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் அவரின் தளத்தை  எனது தளத்தின் முகப்பில்   ஒரு மாதம் முழுவதும் இலவசமாக விளம்பர படுத்தலாம் என நினைக்கிறேன் . 
 கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 12 பதிவுகள்  என்னால் வெளியிடப்பட்டது .அதில் என்னை நெகிழ வைத்த  கருத்துக்கள் கீழே


உயிரை உருவி போட்டவளே  என்ற பதிவிற்கு அன்பர் அளித்த கருத்து கீழே
Chella Thana said...
இந்த காலத்துல ஆண்களை விட பெண்களுக்கு தான் துணிவு கூட !! நம்ம கண்ண மட்டும் இல்ல காது, மூக்கு, வாய் எல்லாத்தையும் பார்த்து சொல்லுவாங்க..... கவிதை மிகவும் அருமை நண்பா.. ஏமாற்றப்பட்ட ஆண்களோட மனக்குமுறல 4 வரியில நச்சுனு சொல்லிருக்கிங்க , நன்றி .....
********************************************************************************
 என்ற கவிதைக்கு அன்பர் அளித்த உண்மையான கருத்து கீழே

இக்பால் செல்வன் said...
//மரணம் பிடிக்கிறது எனக்கு நீ என்னிடம் பேசாத நாட்களில் .. // பெண்களும் இதைச் சொல்லுவார்கள்.. ஆனால் செய்ய மாட்டார்கள். ஆண்கள் சொல்வதில்லை பல தடவைகளில் செய்து விடுவதுண்டு .****************************************************************************
 என்ற பதிவு நான் ஒன்றே முக்கால் வருடம் எழுதிய பதிவுகள் பக்க பார்வைகளை எல்லாம் இரண்டே நாட்களில் உடைத்தெறிந்த பதிவு .எனது மொத்த பதிவுகளில் இது தான் இப்பொழுது முதல் இடம் பக்க பார்வைகளில் ..இந்த பதிவிற்கு அன்பர் அளித்த கருத்து கீழே 
இக்பால் செல்வன் said...
சூர்யா இந்த நிகழ்ச்சியை நடத்தவில்லை . நன்றாக நடிப்பது தெரிகின்றது .. கேள்விகள் சுலபமாக இருந்தும் பலருக்கு பதில் தெரியாதது ஏன் எனவும் சிந்தித்ததுண்டு .. ஒரு வேளை பதற்றமோ என்னவோ. சன் டிவி எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சுங்க. மனுசன் பார்ப்பானா அதை ?
 *******************************************************************************
என்ற கவிதைக்கு பலர் பலவித கருத்து அளித்து என்னை நெகிழ வைத்தனர் .சில தர்ம சங்கட கருத்துகளும் கீழே அரசனின் கருத்து
அரசன் சே said...
உங்களுக்கு திருமணம் முடிந்து சில வருடங்கள் கழித்து இந்த பதிவை நான் உங்க வீட்டம்மாவுக்கு பரிசளிக்க முடிவு செய்துள்ளேன் .. உங்க கருத்து என்ன பாஸ் ... மாறுபட்ட சிந்தனை .. கவிதை அருமை ... என் வாழ்த்துக்கள் அன்பரே
***********************************************************************
  நண்பர்களான தனுஷ் -சிம்பு -SIIMA AWARDS
 என்ற பதிவிற்கு அன்பரின் கருத்து கீழே
 
 திண்டுக்கல் தனபாலன் said...
இப்படி தான் பேச வேண்டும் அல்லது இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று இருவரும் பணம் வாங்கிய பின்... அது போல் செய்யவில்லை என்றால் எப்படி...? SIIMA AWARDS: 2011 WINNERS - நல்ல தொகுப்பு... நன்றி நண்பா... .  ************************************************************************
என்ற  பதிவிற்கு அன்பரின் கருத்தும் எனது பதிலும்
மயிலன் said...
என் உயிர் உன் அடிவயிற்றில் உள்ளிரிருந்து கொஞ்சம் உதைக்க வேண்டும்..எப்பொழுது நடக்குமடி அது..? சும்மா... தலைப்ப பாத்ததும் கொஞ்சம் ஃபீல் ஆயிட்டேன்... நல்லாருக்கு பிரேம்...:)  
@ மயிலன்//போங்க பாஸ் கவிதைக்கு 18+ வைக்க வைச்சுடீவீங்க போல
***********************************************************************************
 மேற்கண்ட கருத்துகளை தவிர இன்னும் பல கருத்துக்கள் இருக்கின்றன  பதிவின் நீளம் கருதி  அவை குறிப்பிட பட வில்லை.பல பதிவுகளுக்கு வந்து சிறப்பான கருத்துகளை அளித்த அன்பர் கோடங்கி  தளத்தின் உரிமையாளர் " இக்பால் செல்வன் " அவர்களுக்கு ஜூலை மாத சிறந்த கருத்தாளர் ஆக தேர்ந்து எடுத்து இருக்கிறேன் நன்றி

முந்தைய கருத்தாளர்கள்  
மே  மாதம்        :சிறந்த கருத்தாளார் பெற்ற தளம்  வரலாற்று சுவடுகள்  
ஜூன் மாதம்    :சிறந்த கருத்தாளார் பெற்ற தளம்  """  என் ராஜபாட்டை"  ராஜா 
இந்த கருத்தாளர் சிறப்பு  வழங்கிய மே மாதம் முதல் எனது பதிவுகளுக்கு TEMPLATE கருத்துக்கள் அளிக்காமல் தரமான கருத்துக்கள் அன்பர்களால் வழங்குவது அதிகரித்திருப்பதை காண்கிறேன் .அந்த வகையில் அளப்பரிய மகிழ்ச்சி எனக்கு நன்றி

உங்கள்  பார்வைக்கு :